நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடந்தது

சீர்காழி,ஆக.27: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் கொடியேற்ற விழாவில் கலந்து கொள்வாதற்காக சென்னை, பெங்களூர் செங்கல்பட்டு, மரக்காணம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணி மாதாவிற்கு வேண்டிக்கொண்டு அவர் அவர் ஊர்களில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை கடந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக வேளாங்கண்ணி நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். வேளாங்கண்ணி மாதா உருவம் பொறித்த கொடிகளை ஏந்தியும், திருஉருவச்சிலையுடன் கூடிய தேரை இழுத்துக்கொண்டும் செல்கின்றனர். சில பக்தர்கள் குழந்தைகள், வயோதிகர்களை அழைத்துக் கொண்டு நேர்த்தி கடன் செலுத்த பாதயாத்திரையாக செல்கின்றனர்.

நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் இரவு பகல் பாராமல் சுட்டெரிக்கும் வெயிலிலும் தங்கள் வேண்டுதலை மனதில் எண்ணிகொண்டு உற்சாகமாக தங்கள் பாதயாத்திரையை தொடர்ந்தனர். வழிநெடுகளும் பக்தர்களுக்கு பலர் உணவு தண்ணீர் அளித்து வருகின்றன வருகின்ற 29ம் தேதி கொடியேற்றப்பட்டு, செப்டம்பர் 8ம் தேதி ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

Related posts

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

கேரளாவிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு