நாகர்கோவிலில்ஆபாச வீடியோ அனுப்பிசக ஊழியரின் குடும்பம் பிரிப்புஎஸ்பியிடம் மின்வாரிய ஊழியர் புகார்

நாகர்கோவில், ஏப்.7: நாகர்கோவிலில் சகஊழியருக்கு ஆபாச வீடியோ அனுப்பி குடும்பத்தை பிரித்து விட்டதாக எஸ்.பியிடம் மின்வாரிய ஊழியர் புகார்மனு அளித்துள்ளார். நாகர்கோவில் பார்வதிபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றிய நண்பர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது முன்னாள் நண்பர் பற்றி உயர் அதிகாரிகளிடம் தவறான தகவல்களை மின்வாரிய ஊழியர் தந்துள்ளாராம். அத்துடன் நிற்காமல், ஆபாச படத்தை முன்னாள் நண்பருக்கு அனுப்பியுள்ளார். இதனை அவரது குழந்தை எடுத்து பார்த்து விட்டு, தனது தாயிடம் செல்போனை கொடுத்துள்ளது. இதனை கண்ட மனைவி ,இவ்வளவு மோசமானவனா நீ எனக்கூறி சண்டையிட்டு கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். இதனால், அதிர்ச்சியடைந்த முன்னாள் நண்பர் தனக்கு மொபைலில் வந்த ஆபாச வீடியோ ஆதாரத்துடன், எஸ்பியிடம் நடவடிக்கை எடுக்க கேட்டு மனு அளித்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நண்பரின் வீடு சுசீந்திரம் காவல் நிலைய எல்லையில் வருவதால், சுசீந்திரம் போலீசார் இதுபற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவமும் மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து