நாகப்பட்டினம் அருகே போலீசார் வாகன சோதனை: டூவீலரில் 110 லிட்டர் புதுவை சாராயம் கடத்தியவர் கைது

 

நாகப்பட்டினம், மே 24: திருமருகல் அருகே ஏனநல்லூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை நடத்தினர். இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து ஒரு மூட்டையில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கோட்டூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(41) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்