நலவாரிய உறுப்பினர்கள் நலத்திட்ட உதவி பெற ஆதார் எண் அவசியம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கவுரி ஜெனிபர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றுள்ள உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஏதுவாக www.tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆதார் எண்ணை இதுவரை இணைக்காதவர்கள் வரும் 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். மேலும், ஏற்கனவே நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்து புதுப்பித்தல் இல்லாதவர்கள்,மேற்படி இணையதள முகவரியில் புதுப்பித்தல் செய்து கொள்ளவும். இந்த இணையதளத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தவர்களைத் தவிர, பழைய நடைமுறையில் புதுப்பித்தல் செய்தவர்கள் அப்டேசன் என்ற பகுதியில் நுழைந்து ஆதார் எண், புதிய குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், கைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யவும். எனவே இந்த விவரங்களை வரும் 28ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதன் மூலமே நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க ₹350 கோடியில் வெள்ள தடுப்பு பணி: செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரம்

சென்ைன காவல் துறையில் 40 இன்ஸ்ெபக்டர்கள் மாற்றம்: கமிஷனர் அதிரடி உத்தரவு

வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜ மண்டல தலைவர் கைது: சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலம்