நத்தம் ஒன்றிய குழு கூட்டம்

நத்தம், நவ. 9: நத்தத்தில் ஒன்றிய குழு கூட்டம் அலுவலக வளாக அரங்கில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சுமதி, துணை தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். கூட்ட அறிக்கையை உதவியாளர் கருப்பணபிள்ளை வாசித்தார். கூட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவரும், அதிகாரிகளும் பதில் தெரிவித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். காசாளர் மாலை முத்து நன்றி கூறினார்.

Related posts

கலசபாக்கம் அருகே அர்னேசா அம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நாளை தொடங்குகிறது

செங்கம் நகரில் 1850 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் திருப்பணிகள் தீவிரம் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது