நத்தம் அருகே கோவில்பட்டியில் விவசாய உபகரணங்கள் கண்காட்சி

நத்தம், ஏப். 15: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோவில்பட்டியில் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ், தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் தங்கி களப்பணியாற்றி வருகின்றனர். இதன்படி விவசாயிகளுக்கான கண்காட்சி நடந்தது.

இதில் இனக்கவர்ச்சி பொறி, ஒளிப்பொறி, டிரைக்கோடர்மா போன்ற விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் செயல்முறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை வேளாண் மாணவர்கள் அபினேஷ், அபிஷேக், ஆதித்யா, ஆதித்யா யாதவ் உள்ளிட்ட மாணவர் குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு