நத்தம் அருகே கோயில் திருவிழா தொடர்பாக பொதுமக்கள் திடீர் போராட்டம் போலீசார் சமரசத்தால் கலைந்தனர்

நத்தம், மார்ச் 28: நத்தம் அருகே தங்கள் தரப்பினரையும் சேர்த்து கோயில் திருவிழா நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். நத்தம் அருகே லிங்கவாடி ஊராட்சியில் பொன்னர் சங்கர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கொண்டாடுவது சம்மந்தமாக கடந்த 14ம் தேதி நத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விளாம்பட்டி, காசம்பட்டி, வத்திப்பட்டி, கோமணாம்பட்டி, சாத்தம்பாடி கிராமங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.தற்சமயம் கோயில் திருவிழா நடைபெற உள்ளதையொட்டி அமைதி பேச்சு வார்த்தையின் படி எங்களை கலந்து ஆலோசிக்காமல் திருவிழா நடவடிக்கைகளை வத்திபட்டியைச் சேர்ந்த ஒருவரும் அவரைச் சார்ந்தவர்களும் செய்து வருகின்றனர் எனக் கூறி விளாம்பட்டி, கோமணாம்பட்டி, சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னர் சங்கர் கோயிலில் நேற்று ஒன்றுகூடி அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.உடன் சம்பவ இடத்திற்கு வந்த லிங்கவாடி விஏஓ தீனதயாளன், நத்தம் போலீஸ் எஸ்ஐ பூபதி தலைமையிலான போலீசார் அவர்களுடன் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். அப்போது கோயிலில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்வதை விடுத்து பேச்சுவார்த்தை வாயிலாக பிரச்னைக்கு தீர்வு கண்டு திருவிழாவை நடத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கூறினர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்….

Related posts

சாலை விபத்தில் வாலிபர் பலி

வீட்டில் பூத்த அதிசய பிரம்ம கமல பூக்கள்

வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு