நத்தத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

நத்தம், ஏப். 6: நத்தத்தில் கல்லூரி மாணவ – மாணவிகளின் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் சுகந்தி தலைமை வகித்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் 100 சதவீதம் வாக்களிப்பது, வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், ஜனநாய கடமையை தவறாது அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியும், கோஷமிட்டும் சென்றனர் இந்த பேரணி அம்மன் குளத்தில் துவங்கிய அவுட்டர் வழியாக நகர் பகுதிகளில் சென்று யூனியன் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் மண்டல துணை தாசில்தார் சுந்தர பாண்டியன், தேர்தல் துணை தாசில்தார் டேனியல் பிரேம் குமார், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் மற்றும் வருவாய் துறையினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்