நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு

தியாகதுருகம், பிப். 8: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஊ.கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் முருகன் (50). இவர் மரப்பட்டறையில் மரம் அறுக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தியாகதுருகம் பகுதிக்கு தனது சொந்த வேலை காரணமாக நேற்று வந்துள்ளார். அப்போது சேலம் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்