நகராட்சி ஒப்பந்ததாரர் கொலை கைதான 7 பேர் மீது குண்டாஸ்

 

விருதுநகர், அக்.9: விருதுநகர் நகராட்சி ஒப்பந்ததாரர் குமரன் என்ற குமரவேல் கடந்த ஜூலை 25ல் மாம்பழ பேட்டையில் வைத்து கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பால்பாண்டி என்ற பவர் பாண்டி(24), செல்வம்(19), அந்தோணி(25), முருகன் என்ற முருகானந்தம்(20), வெங்கடேஷ் என்ற வெங்கடேஸ்வரன்(25), பாத முத்துக்குமார் என்ற பாதமுத்து(19), விஜயகுமார்(26) ஆகிய 7 பேரும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டதாலும், மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையிலும் விருதுநகர் எஸ்பி சீனிவாச பெருமாள் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஜெயசீலன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் 7 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்