நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, ஏப்.4: கிருஷ்ணகிரி நகராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு பேரணியை துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பழையபேட்டை காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சாலை வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பதாகைகளுடனும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் நகராட்சி ஊழியர்கள் வழங்கினர். இதில், கிருஷ்ணகிரி தாசில்தார் சுப்பிரமணி, மண்டல தாசில்தார் மகேஸ்வரி, சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தாமோதரன், இளநிலை பொறியாளர்கள் அறிவழகன், உலகநாதன், இளநிலை உதவியாளர் பிரபு மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை