நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

 

திருவாரூர், ஜன. 14: திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை தலைவர் புவனப்பிரியாசெந்தில் துவக்கி வைத்தார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் பெருகினாலும் பெரும்பாலானவர்கள் தற்போது வரையில் இந்த பொங்கல் பண்டிகையை மண்பானையும்,மண் அடுப்பையும் கொண்டு பழமை மாறாமல் கொண்டாடும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பண்டிகையினை ஏற்ற இறக்கம் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலாக கொண்டாட வேண்டும் என கடந்த 2006, 11 திமுக ஆட்சி காலத்தின் போது அப்போதைய முதல்வரான மறைந்த கருணாநிதி மூலம் போடப்பட்ட உத்தரவின் பேரில் இந்த சமத்துவ பொங்கல் விழா இன்று வரையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த பொங்கல் திருநாளானது நடப்பாண்டில் நாளை (15ம் தேதி) கொண்டாடப்படவுள்ள நிலையில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இந்த சமத்துவபொங்கல் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவை தலைவர் புவனப்பிரியாசெந்தில் துவங்கி வைத்தார். இதில் துணை தலைவர் அகிலாசந்திரசேகர், கமிஷ்னர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்