தொழிலாளியை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது

ஈரோடு, மே 23: ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் சின்னியம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (32). கூலி தொழிலாளி. இவர், ஈரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடன் வாங்கியிருந்தார். கடன் தொகையை வசூல் செய்வதற்காக தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்களான ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த அஜித்குமார் (29), கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் (38) இருவரும் கடந்த 19ம் தேதி காஞ்சிக்கோவிலுக்கு வந்து சோமசுந்தரத்தை நேரில் சந்தித்து கடன் தொகையை செலுத்துமாறு கேட்டுள்ளனர்.

அப்போது, சோமசுந்தரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோமசுந்தரம் காஞ்சிக்கோவில் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து நிதி நிறுவன ஊழியர்களான அஜித்குமார், யுவராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related posts

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது