தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது

தர்மபுரி, ஆக.30: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கும்மனூர் சூடானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(41), கூலி தொழிலாளியான இவரது மனைவி சுய உதவிக்குழு நடத்தி வருகிறார். அக்குழுவின் பணத்தை முருகன் மூலம் வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி, ரூ.5 ஆயிரம் பணத்தை வங்கியில் கட்டுவதற்காக பாலக்கோட்டிற்கு முருகன் சென்றார். பஸ்சில் இருந்து இறங்கியபோது, அவரது சட்டைப்பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை மர்மநபர் ஒருவர் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

அங்கிருந்தவர்களின் உதவியுடன் துரத்திச்சென்று அந்த நபரை மடக்கி பிடித்த முருகன் பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் திருப்பத்தூர் தென்றல் நகரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(46) என்பது தெரியவந்தது. உடனே, அவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்