தொழிலாளிக்கு கத்திக்குத்து

 

கோபால்பட்டி, மே 31: சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (38). கூலித்தொழிலாளி. இவருக்கும் சின்னகாளிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஞ்சுகுழிப்பட்டியில் நடந்த பகவதி அம்மன் கோவில் விழாவில் நாகராஜூக்கும், வெள்ளைச்சாமிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் வெள்ளைச்சாமி கத்தியால் நாகராஜை குத்தினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரில் சாணார்பட்டி எஸ்ஐ ராஜேந்திரன் வழக்குப்பதிந்து வெள்ளைச்சாமியை கைது செய்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்