தைவானை மிரட்ட நடந்த சீனாவின் போர் பயிற்சி நிறைவு

பீஜிங்: சீனாவின் எச்சரிக்கையை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தைவான் வருகை தந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தைவான் ஜலசந்தி உள்ளிட்ட 6 முக்கிய பகுதிகளில் கப்பற்படை, ராணுவம், விமானப்படை ஆகியவை ஒருங்கிணைந்த போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில், போர் பயிற்சி வெற்றிகரமாக முடிந்ததாக சீன ராணுவம் தெரிவித்தது. இது தொடர்பாக அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் நாளிதழின் டிவிட்டரில், ‘கிழக்கு பிரிவின் மூத்த கலோனல் ஷி யீ தலைமையில் தைவான் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த கூட்டு ராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என ராணுவத்தின் கிழக்கு பிரிவு தெரிவித்துள்ளது’, என்று கூறப்பட்டுள்ளது.* டூ பிளஸ் டூ ஒப்புதல் சீனாவின் குயிங்டோ நகரில் சீனா, தென்கொரியா வெளியுறவு அமைச்சர்கள் வாங் யீ மற்றும் பார்க் ஜின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை தொடர்ந்து வினியோகிக்கவும் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சகங்களின் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் ஒப்புகொண்டன….

Related posts

குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 41 பேர் உயிரிழப்பு

துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் மகன் குற்றவாளி

ராணுவ விமான விபத்து மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பலி