தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம், ஏப்.11: ராஜபாளையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் அருகே சேத்தூர் அசையாமணி விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பங்கஜம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சேத்தூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மதிவாணன் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் ரூ.1.95 லட்சம் பணம் இருந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இதே குழுவினர் ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முத்துகிருஷ்ணன் என்பவரிடம் நடத்திய சோதனையில், அவரிடம் ரூ.1.38 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.3.33 லட்சத்தை பறக்கும் படையினர் வட்டாட்சியர் ஜெயப்பாண்டியிடம் ஒப்படைத்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை