தேர்தலின்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

 

மயிலாடுதுறை, மார்ச் 25: மயிலாடுதுறை மக்களவை தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு வந்தது. விவிபாட் இயந்திரம் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கிளிப் (லாக்) சரி இல்லாததால் கீழே விழும் ஆபத்து. வாக்கு சாவடிகளுக்கு உள்ளதால் அனுப்பும் முன் சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டபேரவை தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், இவிஎம் இயந்திரங்கள் சித்தர்க்காடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு நேற்று மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதிக்கான இயந்திரங்கள் சித்தர்க்காடு கிடங்கில் இருந்து 319 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 319விவிபேட், 345 இவிஎம் இயந்திரங்கள் வாகனங்களில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு துப்பாகி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாங் ரூமிற்கு கொண்டுவரப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா மேற்பார்வையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஸ்டாங் ரூம் பூட்டி சீல்வைக்கப்பட்டது. மேலும், விவிபாட் இயந்திரத்தை பயணியாளர்கள் எடுத்துச் செல்லும் பொழுது விவிபாட் இயந்திரம் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கிளிப் (லாக்) சரி இல்லாமலும், விவிபாட் இயந்திரம் சரியாக மூட முடியாமல் திறந்து கொண்டு இயந்திரங்கள் கீழே விழும் நிலையிலும் உள்ளது. இதனால் விவிபாட் இயந்திரம் பழுது ஏற்பட்டு வாக்குபதிவு தாமதம் என்றும் வாக்கு சாவடி மையங்களுக்கு அனுப்பும் முன் விவிபாட் இயந்திரத்தின் பெட்டியினை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்