தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் காரைக்கால் மாணவிக்கு 3வது பரிசு

காரைக்கால் : உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் காரைக்கால் கோட்டுச்சேரி அரசு பள்ளி மாணவி பூங்குழலி கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றார்.காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் உள்ள வஉசி அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி பூங்குழலி. இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் காரைக்காலில் இருந்து கலந்து கொண்டார். வலுதூக்கும் போட்டியில் மாணவி பூங்குழலி மூன்றாம் பரிசு (வெண்கலம்) பெற்றுள்ளார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன்சர்மாவை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். துணை வட்டாட்சியர் மதன்குமார் மற்றும் பயிற்சியாளர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்….

Related posts

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை