தேசிய அறிவியல் தின விழா

பழநி, மார்ச் 2: பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் துரைமாணிக்கம் தலைமை வகித்தார். துறை தலைவர் பிரமிளா வரவேற்றார். மூத்த விஞ்ஞானி முருகன் வீரபாண்டியன் ”நிலையான சுகாதாரத்திற்கான மின்வேதியியல்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இணை பேராசிரியர் பாக்யராஜ் நன்றி கூறினார்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு