தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை

ஸ்பிக்நகர், ஏப். 18: தூத்துக்குடி முள்ளக்காடு மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன் மகள் வெட்காளியம்மாள்(23). இவர், இளநிலை ஆசிரியை பயிற்சி முடித்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள துணிக்கடையில் வேலைக்கு சென்று வந்தார். இவரது தந்தை முருகன், சகோதரர் ஆகியோர் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். தாய் இறந்து விட்டார். நேற்று முன்தினம் வெட்காளியம்மாள், துணிக்கடைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது தந்தையும், சகோதரரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவுக்காக வீடு திரும்பினர். அப்போது வெட்காளியம்மாள், ஹேர்டை குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த இருவரும், வெட்காளியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து முத்தையாபுரம் எஸ்ஐ சுந்தரம் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு