தூத்துக்குடியில் வணிக வரித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, மே 31: தூத்துக்குடியில் வணிக வரித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 1000 துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு பட்டியல் உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு பட்டை அணிந்து மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி வணிகவரி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சங்கர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில வரி அலுவலர் வியாகுல புஷ்பம் விஜய் வாழ்த்திப் பேசினார். மாநில துணை தலைவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்ட மாவட்ட செயலாளருமான முருகன், போராட்ட விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி வட்ட தலைவர் கணேசன், தமிழ்நாடு மீன் துறை சங்க மாநில நிர்வாகி சுபேரா பானு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். ஆதிசக்தி நன்றி கூறினார்.

Related posts

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு