தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது

 

தூத்துக்குடி, மே 27: தூத்துக்குடியில் நடந்து சென்ற மீனவரை கத்தியால் தாக்கி பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் மெயின் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் களஞ்சியராஜ்(46), மீனவர். இவர் தூத்துக்குடி பூபாலராயர்புரம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே தனது தாயார் சரோஜாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே, மது அருந்திய நிலையில் ஒரு வாலிபர், களஞ்சியராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மது அருந்த பணம் கேட்டுள்ளார்.

அவர் கொடுக்க மறுக்கவே அவரை அந்த வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த களஞ்சியராஜ் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து களஞ்சியராஜ் அளித்த புகாரின்பேரில் வடபாகம் எஸ்ஐ மாரிமுத்து வழக்குப்பதிந்து, தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை மீனவர் காலனியைச் சேர்ந்த தாசன் மகன் நிக்சன்(19) என்பவரை கைது செய்தார். இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்