தூத்துக்குடியில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

தூத்துக்குடி,மார்ச் 13: தூத்துக்குடியில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து பார்வையிட்டனர். தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ்நிலையத்தில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்., தலைவர் தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, டிஆர்ஓ அஜெய்சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு