தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி, மார்ச் 24: தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில் பறக்கும் படையினர் பைக்கில் வந்த தனியார் நிதி நிறுவன ஊழியரை நிறுத்தி சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சத்தை பறிமுதல் செய்து தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் அதிகாரி பொன்மாரி தலைமையில் காவல் துறையினர் அடங்கிய பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பையில் இருந்த கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை