துவரங்குறிச்சி அருகே லோடு லாரி மோதி மின்கம்பி சேதம்

துவரங்குறிச்சி, டிச. 17: திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அடுத்த அதிகாரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மின்கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில் நேற்று காலை அதிக பாரம் ஏற்றிய அடையாளம் தெரியாத லாரி ஒன்று சென்றபோது மின் கம்பிகள் மீது உரசியதால் மின்கம்பம் சாய்ந்தது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. இருந்தபோதும் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் மின் வாரியத்தினர் விரைந்து சென்று மின்சாரத்தை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்