துணை மின் நிலையத்தில் புகுந்த மான் மீட்பு

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே துணை மின் நிலையத்தில் புகுந்த மானை வனத்துறையினர் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.தண்டராம்பட்டு அடுத்த வரகூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்திற்கு அருகில் உள்ள காப்புக்காட்டில் இருந்து நேற்று வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று அலுவலகத்திற்குள் புகுந்தது.இதை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் மானை மடக்கி பிடித்து கட்டி வைத்ததுடன், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், மானை மீட்டு அருகில் உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்….

Related posts

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி