தீயணைப்புத்துறை சார்பில் புலியூர்குறிச்சி குளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை

குமாரபுரம், செப்.22: குமரி மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் காலத்தில் பருவமழை அதிகம் பெய்யும் என்பதால், மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் வகையில் குமரி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சத்திய குமார் உத்தரவுபடி தீயணைப்புத்துறையினர் தக்கலை புலியூர்குறிச்சி இரட்டை தெருவில் உள்ள குளத்தில் அவசரகால பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். இதில் தக்கலை தீயணைப்புப்படை பயிற்சி நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமை வகித்தார். அப்போது தண்ணீரில் மூழ்கியவர்களை விரைவில் மீட்பது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டால் வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி எப்படி பாதுகாப்பாக தப்பிப்பது?, வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வது உள்ளிட்ட பல்வேறு மீட்பு பணிகள் தொடர்பாக ஒத்திகை நடத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்