திற்பரப்பு பேரூராட்சியில் 9 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்

குலசேகரம்,பிப்.25: திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட கொல்லாரை பகுதியில் உள்ள கிணற்றில் மின் விசை பம்பு அமைத்து குடிநீர் வழங்க ₹1.5 லட்சம், சூரியகோடு பகுதியில் உள்ள இரட்டை குளத்தில் படித்துறை அமைக்க ₹4 லட்சம், அஞ்சுகண்டறை பகுதியில் நிழலகம் அமைக்க ₹3.5 லட்சம் என ₹9 லட்சம் பத்மநாபபுரம் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்கான பணிகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, துணை தலைவர் ஸ்டாலின் தாஸ், பேரூர் திமுக செயலாளர் ஜாண் எபனேசர், கிளை செயலாளர்கள் பிரின்ஸ்பெல்பாபு, சுரேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை