திருவொற்றியூர், மீனம்பாக்கம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: 897 பேர் மனு அளித்தனர்

சென்னை, ஜன.23: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 12வது வார்டுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் , காலடிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. கவுன்சிலர் கவிகணேசன் தலைமை வகித்தார். மாநகராட்சி, வருவாய்த் துறை, குடிநீர் வாரியம், இ-சேவை மையம், காவல் துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த குறைகளுக்காக 647 பேர் மனு அளித்தனர். குறிப்பாக, வாடகை வீட்டில் குடியிருப்போர் தங்களுக்கு தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குடியிருப்புகளை இலவசமாக பெற்றுத் தரக் கோரி 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

மேலும் முதியோர், விதவை உதவித் தொகை, மகளிர் உரிமைத் தொகை, அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளித்தனர். முகாமில் பெயர் குளறுபடியால் 6 ஆண்டுகளாக அரசின் உதவித் தொகை பெறமுடியாமல் தவித்த மாற்று திறனாளிக்கும், குடிநீர், வீட்டுவரி, மின்சாரம் பெயர் மாற்றம் போன்ற பலவேறு குறைபாடுகளுக்கும் உடனடி தீர்வு காணபட்டது. முன்னாள் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், சைலஸ், திமுக நிர்வாகிகள் ஜெயராமன், பாஸ்கர், பாக்கியமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* ஆலந்தூர் மண்டலம் 159வது வார்டுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மீனம்பாக்கம் ஆதிதிராவிடர் பள்ளியில் நேற்று நடந்தது. கவுன்சிலர் அமுதபிரியா செல்வராஜ் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி உதவி கமிஷனர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.கருணாநிதி எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அனைத்து துறை சார்பாக அமைக்கப்பட்ட முகாம்களை பார்வையிட்டார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் அருள்பிரகாசம், மெட்ரோ வாட்டர் உதவி பொறியாளர் வசந்தப் பிரியா, மீனம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர், முன்னாள் கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், மாயாண்டி, ஜெயா, இலக்கிய அணி மேகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு