திருவாரூரில் 15ம்தேதி மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

 

திருவாரூர், டிச 12: திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வரும் 15ம்தேதி நடைபெறுகிறது என்று செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் துர்காலயா சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 15ம்தேதி நடைபெறுகிறது.

அதன்படி காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது குறைகளை நேரில் விண்ணப்பமாக அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிருமிநாசினி குடித்த மூதாட்டி உயிரிழப்பு

உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

கார் மீது லாரி மோதி மூதாட்டி பலி