திருவாரூரில் இந்திய மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், மே 23: காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர் சரண் சிங்கை கைது செய்ய கோரி திருவாரூரில் இந்திய மாதர் சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவரும், பிஜேபியை சேர்ந்த எம்.பியுமான பிரிஜ்பூசன் சரண்சிங் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரை பதவி நீக்கம் செய்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்திட வலியுறுத்தி இந்திய மாதர் சம்மேளனத்தினர் சார்பில் திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் தமிழ் செல்வி ராஜா, சுலக்சனா, உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்