திருமானூர், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

 

அரியலூர், பிப்.9: திருமானூர் மற்றும் ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 554 பிளஸ்1 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா வழங்கினார். அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருமானூர், கீழக்காவட்டாங்குறிச்சி, திருமழபாடி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 217 பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கும், ஏலாக்குறிச்சி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கோவிலூர் மற்றும் குருவாடி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 337 மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோக் சக்ரவர்த்தி, ஊராட்சி தலைவர் உத்திராபதி, மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் சங்கர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்