திருமானூர் அருகே லாரி மோதி 20 ஆடுகள் பலி

அரியலூர், ஏப்.11: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே நேற்று மாலை லாரி மோதியதில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 20 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. திருமானூர் அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி இளவரசி(52). விவசாயியான இவர், தனக்கு சொந்தமான் 30 ஆடுகளை நேற்று முற்பகல் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, நேற்று மாலை வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது அரியலூர், தஞ்சாவூர் சாலையை கடந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஆடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ 20 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்த முடிகொண்டான் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர், லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்