திருமணம் செய்ய மறுத்ததால் காதலித்த பெண்ணின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்வு: மதுரை வாலிபர் அதிரடி கைது

செங்கல்பட்டு: காதலித்த பெண்ணின் அபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் அஜ்மத் பைசல் (25). செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேல்டு சிட்டி பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் அஜ்மத்பைசல் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில், செங்கல்பட்டு திருமணியை சேர்ந்த 22 வயது இளம்பெண்  ஒருவரும்  பணியாற்றினார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு நேரத்தில், அஜ்மல்பைசல், இளம்பெண்ணின் வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது.அப்போது, அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி கொண்ட வாலிபர், இளம்பெண் வீட்டில் குளிக்கும்போது, உடைமாற்றும்போது, தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இவர்களது காதல் விவகாரம், இளம்பெண்ணின் வீட்டுக்கு தெரிந்ததும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அஜ்மத்பைசல்,  இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு பெண் வீட்டார் ஒப்பு கொள்ளாவில்லை.இதனால், ஆத்திரமடைந்த அஜ்மத்பைசல், தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், இளம்பெண்ணை ஆபாசமாக எடுத்த வீடியோவை முகநூல் மற்றும் சமூக  வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதனை, இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதனால் அவர், இளம்பெண்ணின் வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ செய்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், இளம்பெண்ணின் வீடியோவை, வாலிபர் வெளியிட்டது தெரிந்தது. இயைதடுத்து அஜ்மத்பைசல் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்தலாம்: மாநகராட்சி அதிகாரி தகவல்

தடுமாறி கீழே விழுபவர்கள் சக்கரத்தில் சிக்காமல் தடுக்க 1,315 மாநகர பேருந்துகளின் பக்கவாட்டில் தடுப்பு கம்பி: மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை

நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள் போதிய இருப்பு உள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்