திருமங்கலம் நகரின் தூய்மை பணிக்கு புதிய வாகனங்கள்: நகராட்சி தலைவர் துவக்கி வைத்தார்

 

திருமங்கலம், ஜூலை 25: திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்கி வருகின்றனர். இந்த குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த தூய்மை பணிக்காக ஏற்கனவே 6 மினிவேன்கள் உள்ளன. நகரின் அனைத்து இடங்களுக்கு பேட்டரி மூன்று சக்கர வாகனங்களுடன் இந்த மினிவேன்களும் சென்று குப்பைகளை ஏற்றி வருகின்றன.

இந்நிலையில் திருமங்கலம் நகராட்சியின் தேவை கருதி தமிழக தற்போது புதியதாக ரூ.25 லட்சம் மதிப்புள்ள மூன்று நவீன மினிவேன்களை வழங்கியுள்ளது. இந்த வாகனங்களை நேற்று நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் நித்யா, குழுத்தலைவர் ஜஸ்டின்திரவியம், கவுன்சிலர்கள் சின்னசாமி, வீரக்குமார், திருக்குமார், சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு