திருப்பூரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த படியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் ஆனந்தி (17). திருப்பூரில் உள்ள ஒரு போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இப்பயிற்சி மையம் தனியார் கட்டிடத்தில் 3வது மாடியில் அமைந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். நேற்று மாலை மணிகண்டன், பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். அங்கு, ஆனந்தியுடன் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் மேல் மாடியில் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென கீழே குதித்தார் ஆனந்தி. இதில் மாணவிக்கு இடுப்பு மற்றும் தலைப்பகுதியில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்த மணிகண்டன் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெற்கு போலீசார் விரைந்து வந்து ஆனந்தியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலையில் ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், ‘மணிகண்டன் தனது மகளின் காதல் விவகாரத்தை கண்டித்ததால் மனமுடைந்த ஆனந்தி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது’. போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்….

Related posts

நடுக்கடலில் படகு கவிழ்ந்தது 11 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள்

மனைவி தற்கொலை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கணவன் சாவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜவின் அழுத்தத்தால் அதிமுக புறக்கணிப்பா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்