திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா

ஈரோடு, பிப்.6: ஈரோடு அடுத்துள்ள நசியனூரில் குலாலர் சித்தி விநாயகர் கோயிலில் 59ம் ஆண்டு 63 நாயன்மார்களில் முதன்மையான திருநீலகண்ட நாயனார் குரு பூசை நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி திருநீலண்ட நாயனார், ரத்தினசல அம்மையார் ஆகியோரின் சிலைகள் நசியனூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மூவேந்தர் ஈஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் குலாலர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் மூவேந்தர் ஈஸ்வரர் கோயிலில் இருந்து ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அங்கு மகா பூஜையும் அன்னதானமும், சிவனடியார்களுக்கு திருவோடு வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குலாலர் சங்க நிர்வாகி வெங்கடாசலம் செய்திருந்தார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு