திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

திருத்துறைப்பூண்டி, மே 10: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் கிராமம் வாரியாக ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாட்கள் வரை ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு கால்நடை பாரமரிப்புத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் சாரு உத்தரவின் பேரில் மண்டல இணை இயக்குனர், உதவி இயக்குனர் வழிகாட்டிதலின் படி நடைபெற்று வருகிறது.

திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூர் கால்நடை மருந்தகத்திற்க்கு உட்ப்பட்ட கீரளாத்தூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவர் சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 200 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டனர்.கடியாச்சேரி கால்நடை மருந்தகத்திற்க்கு உட்ப்பட்ட எழிலூர் ஊராட்சியில் டாக்டர் காவியா தலைமையிலான மருத்துவ குழுவினர் 200 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டனர்.

Related posts

ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை திருட்டு

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

வேலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை