திருத்துறைப்பூண்டி அருகே விதிமீறல் 36 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்: மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 10: திருத்துறைப்பூண்டி அருகே காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதில் விதிமீறலில் ஈடுபட்டவரின் வீட்டில் இருந்து 36 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரெங்கம் கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் வீட்டு உபயோக சிலிண்டர்களில் இருந்து கள்ளத்தனமாக பெரிய சிலிண்டர்களுக்கு எரிவாயு பாதுகாப்பற்ற முறையில் ஒரு வீட்டில் மாற்றப்படுவதாக புகார் வந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வு துறையினருடன் வெங்கடேஷ் என்பவரது வீட்டை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த 22 பெரிய சிலிண்டர்கள், 10 சிறிய சிலிண்டர்கள், 4 வீட்டு உபயோக சிலிண்டர்கள் என 36 சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன. ஆய்வின் போது வட்ட வழங்கல் அலுவலர்கள் அலெக்ஸாண்டர், வசுமதி, வருவாய் ஆய்வாளர் முரளிதரன், கிராம நிர்வாக அலுவலர் கோசிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

டாக்டர்களிடம் ரகளை செய்த வாலிபர் ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு

அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 2 பேர் தப்பி ஓட்டம்: வேலூரில் பரபரப்பு

மாந்தோப்பில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் 2வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு