திருத்தணியில் ஜமாபந்தி

திருத்தணி: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் ஜமாபந்தி தொடங்கியது.  திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து குடும்ப அட்டை .முதியோர் உதவித்தொகை. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை. பட்டாமாற்றம், கிராமநத்தம், பட்டா நகல் உள்ளிட்ட 153 மனுக்கள் அளிக்கப்பட்டது. கிராமநத்தம் பட்டா நகல், குடும்ப அட்டை உள்ளிட்ட 8 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது, மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. துணை வட்டாட்சியர்கள் ரீட்டா முரளி, சாமுண்டீஸ்வரி வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், ஸ்டீபன்ராஜ், விஏஓ அலுவலர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். …

Related posts

ஜூன் 3-க்குள் ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு..!!

அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

விடுமுறை நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு