திருச்செந்தூர் கோயிலில் கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்

உடன்குடி, நவ. 4: தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சில நாட்களாக தமிழகத்தின் அநேக இடங்களிலும், குறிப்பாக தென்மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தின் கஷ்டபட்ட மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் மிதமான மழை பெய்தது. இதனால் ஏராளமான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம் செய்தும், புனித நீராடியும் சென்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்