திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் கோயில்களில் விளக்கு பூஜை

 

திருச்செந்தூர், பிப். 11: தை அமாவாசை பத்திர தீப திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் தை அமாவாசை மற்றும் பத்திர தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஆறுமுகநயினாருக்கு சண்முகார்ச்சனை வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து திருக்கோயிலுடன் இணைந்த ஆனந்த வல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தலைவர் ஆனந்த ராமச்சந்திரன் துவக்கிவைத்தார். சங்கச் செயலாளர் வெங்கடாசலம், துணைச் செயலாளர் ஞானசுந்தரம், கூட்டுறவு வங்கி துணை மேலாளர் குமார், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளர் கார்க்கி முன்னிலை வகித்தனர். இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய நிர்வாகிகள், இளைஞர் பேரவை, மகளிரணி மற்றும் வெள்ளாளர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 6மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, நண்பகல் 12மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. இரவு 7.30 மணிக்கு 108 மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பெண்கள் அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு