திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

உடன்குடி:திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, திருச்செந்தூர் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமை வகித்து, பயிற்றுனர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் விளக்கவுரையாற்றினார். சிறப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் வீரர்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ், இசக்கி மற்றும் அகஸ்டின் ஆகியோர் செயல்முறை விளக்கமளித்தனர். ஏற்பாடுகளை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அருள் செய்திருந்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்