தியாகராஜர் கோயிலில் திருவாதிரை பெருவிழா27ல் பதஞ்சலி, வியாக்ரதபாத முனிவர்களுக்கு பாத தரிசனம்

திருவாரூர்,டிச.25: திருவாரூர் பிரசித்திபெற்ற தியாகராஜர் கோயிலில் திருவாதிரை பெருவிழாவை முன்னிட்டு 27ம் தேதி பதஞ்சலி, வியாக்ரதபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளுகிறார். பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவாரூர் பிரசித்திபெற்ற தியாகராஜர் கோயிலில் திருவாதிரை பெருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதில் தனுர் மாத பூஜையுடன் மாணிக்கவாசகர் ராஜநாராயண மண்டபம் மற்றும் அறநெறியார், நீலோத்பலாம்பாள், வன்மீகநாதர் சன்னதிகளில் எழுந்தருளி திருவெம்பாவை விண்ணப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் தினமும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று (24ம் தேதி) கல்யாணசுந்தரர் – பார்வதி, சுக்ரவார அம்மன் ஆகியோர் ஊஞ்சல் மண்டபம், பக்தகாட்சி மண்பத்திற்கு எழுந்தருளி யதாஸ்தானம் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர்.இதற்கிடையில் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷம் நந்தி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாதிரை பெருவிழா நிகழ்ச்சியின் தொடர்ந்து இன்று (25ம் தேதி) இரவு தியாகராஜர் ராஜநாராயண மண்டபம் எழுந்தருகிறார். 26ம் தேதி தியாகராஜருக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையும், இரவு 10 மணியளவில் தியாகராஜருக்கு திருவாதிரை மகா அபிஷேகம், நடராஜருக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.வரும் 27ம் தேதி காலை 6 மணிக்கு தியாகராஜர் பதஞ்சலி, வியாக்ரதபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளுகிறார். 7 மணிக்கு நடராஜர் வீதியுலாவை தொடர்ந்து சபாபதி மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் தியாகராஜர் ராஜநாராயண மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் வந்தடைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் பாத தரிசனத்தன்று ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பகதர்கள் வசதிக்காக பாத தரிசனத்தை முன்னிட்டு தகரத்தினால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்