திம்மராய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

போச்சம்பள்ளி, பிப்.21: கூச்சனூர் திம்மராய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து. இதில் ஆயிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வலசகவுண்டனூர் ஊராட்சி கூச்சனூர் திம்மராய சுவாமி கோவில் ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாக சாலை பிரவேசம், தீபாரதனை, பூஜைகள் நடந்தன. விழாவில் நேற்று திம்மராய சுவாமிக்கு புனித நாடி தீர்த்தங்களை ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் பெங்களுரு பகுதியை சேர்ந்த குல தெய்வ பங்களிகள், பக்தர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கு பிரசதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சமபந்தி விருந்து நடைபெற்றது.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி