திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் 5 நாள் சூறாவளி பிரசாரம்: இன்று தொடங்கி 26ம் தேதி முடிக்கிறார்

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று முதல் 5 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 22ம் தேதி (இன்று) காலை 8.30 மணியளவில் விளாத்திகுளம், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 3 மணியளவில் பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்கிறார். மாலை 6 மணியளவில் ராயபுரம், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், துறைமுகம், திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ராயபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 23ம் தேதி(நாளை) காலை 8.30 மணியளவில் வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தளி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வேப்பனஹள்ளியிலும், மதியம் 3 மணியளவில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பாலக்கோடிலும், மாலை 4.30 மணியளவில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ேசலம் தெற்கு, ஓமலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் வடக்கிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.24ம் தேதி ஆத்தூர், கெங்கவல்லி, உளுந்தூர்பேட்டை சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஆத்தூரிலும், மாலை 3 மணியளவில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திட்டக்குடியிலும், மாலை 4.30 மணியளவில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்திலும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.25ம் தேதி காலை 8.30 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலையிலும், மாலை 3 மணியளவில் மைலம், செஞ்சி, திண்டிவனம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மைலத்திலும், மாலை 4.30 மணியளவில் பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பல்லாவரத்திலும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.26ம் தேதி காலை 8.30 மணியளவில் திருவரங்கம், திருச்சி மேற்கு, இலால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவரங்கத்திலும், மாலை 3 மணியளவில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கரூரிலும், மாலை 4.30 மணியளவில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மேற்கிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? :பாஜக

விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு

நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம்: அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு