திமுக கூட்டணிக்கு தேதிமுக ஆதரவு

ஈரோடு, ஏப். 11: நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு தேதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய திராவிட முன்னேற்றக்கழக நிறுவனர் பிரேம்நாத் கூறியதாவது, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் ஈரோட்டில் உள்ள அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர் ஆகியோர் எங்களை நிராகரித்ததால் அக்கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்று திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் அளித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு