திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேன்கனிக்கோட்டை, ஏப்.4: தளியில், திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளியில், திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, தளி தெற்கு ஒன்றியம், தளி வடக்கு ஒன்றியம், கெலமங்கலம் மேற்கு ஒன்றியம், அஞ்செட்டி ஒன்றியம், தேன்கனிக்கோட்டை பேரூர், கெலமங்கலம் பேரூர் ஆகிய நிர்வாகிகளிடம், உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, தளி ஒன்றிய செயலாளர்கள் திவாகர், சீனிவாசலுரெட்டி, அஞ்செட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் தர், பேரூர் செயலாளர்கள் சீனிவாசன், தஸ்தகீர், ஒன்றிய அவைத் தலைவர் நாகராஜ், துணை செயலாளர்கள் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், கங்கப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு