திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கான திட்டம் முழுமையாக நிறைவேறும்: மகளிர் தினத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று மகளிர் தின வாழ்த்தில் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார். அவரது முகநூல் பதிவு: தாயாக, மனைவியாக, சகோதரியாக,  மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம். பெண்களின் உரிமைகள் கவனத்துடன் எப்போதும் பாதுகாக்கப்படுவதற்கும் அவர்கள் தற்சார்புடன் கூடிய தகுதிமிக்க முன்னேற்றம் அடைவதற்கும் குடும்ப சொத்தில்  பெண்களுக்கு சமபங்கு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழு, காவல்துறையில் பெண்கள் நியமனம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியது தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு. திமுக ஆட்சி மலர்ந்ததும் அனைத்துக் குடும்ப தலைவியருக்கும் மாதம்தோறும் 1000 உரிமைத்தொகை வழங்கப்படும். எதிர்வரும் காலத்திலும் உரிமைத்தொகை உள்ளிட்ட பெண்களுக்கான பலவகைத் திட்டங்கள் முழுமையாக  நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.  சமுதாயத்தில் சரிபாதியளவில் உள்ள பெண்ணினத்தை பலபடப் பாராட்டிப் பெருமைப்படுத்தியிருக்கிறது தமிழ் இனத்தின் நிரந்தரத்துவம் பெற்ற இலக்கியங்கள். அத்தகைய பெண்கள் அனைவருக்கும்  சர்வதேச மகளிர் நாளாம் இன்று இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்….

Related posts

அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இபிஎஸ் தலைமையை ஏற்றால் பரிசீலிப்போம்: முன்னாள் அமைச்சர் கண்டிஷன்

மாநில கல்வி கொள்கைக்கு ஏற்றார்போல் மருத்துவ படிப்பு நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி

தேர்தலில் தொடர் தோல்விகளால் மக்களை சந்திப்பதற்கு பயப்படுகிறார் எடப்பாடி: டிடிவி கலாய்